'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதை வரவேற்று ரசிகர்கள் கொண்டாடினர். இன்னும் சில வெறிப்பிடித்த ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறேன் என்ற பெயரில் ரஜினியின் அண்ணாத்த பிளக்ஸ் முன்பு ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தை அந்த பேனர் மீது அபிஷேகம் செய்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இது தொடர்பாக நடிகர் ரஜினியோ தனது ரசிகர்களை கண்டிக்கவில்லை. இதனாலயே அவர் கண்டிக்காததை சுட்டிக்காட்டி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட ரசிகர்களை தடுக்க வலியுறுத்தி அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.