ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எனக்கு ரகசிய திருமணம் எதுவும் நடக்கவில்லை; இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளும் ஆசையும் இல்லை, என்று நடிகை லட்சுமி ராய் கூறியுள்ளார். லட்சுமிராய்க்கு ரகசியமாக திருணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதனை அவர் மறுத்துள்ளார். இதுபற்றி லட்சுமிராய் அளித்துள்ள பேட்டியில், எங்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவது உண்மைதான். திருமணம் எனக்கில்லை. என் அக்கா அஸ்வினிராய்க்கு. அடுத்து எனக்குதான் திருமணம். ஆனால் அது இப்போது இல்லை. இப்போதுதான் சினிமாவில் இரண்டாவது ரவுண்டை ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் தேசிய விருது வரைக்கும் போகவேண்டும். பிறகுதான் திருமணம். எப்போது திருமணம் செய்தாலும், அது காதல் திருமணம்தான். தற்போது யாரையும் காதலிக்கவில்லை. எனது திருமணம் ரகசியமாக நடக்காது, என்று கூறியுள்ளார்.