பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்து விட்ட நடிகர் பிரித்விராஜ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக தற்போது இரண்டாவது படத்தையும் மோகன்லாலை ஹீரோவாக வைத்தே ப்ரோ டாடி என்கிற பெயரில் இயக்கி வந்தார். மீனா, கனிகா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மாதம் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் பிரித்விராஜ். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள பிரித்விராஜ், “இரண்டாவது படத்தையும் இயக்கி முடித்து விட்டேன் மோகன்லாலை கேமராவுக்கு முன்னால் நிற்க வைத்து பார்ப்பது ரொம்பவே ஜாலியான அனுபவமாக இருந்தது. நம்பிக்கை வைத்து இந்த படத்தையும் நான் கேட்ட கலைஞர்களையும் கொடுத்த மோகன்லாலுக்கும், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.




