'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த மூன்று முக்கிய நடிகர்களான கமல்ஹாசன், அர்ஜுன், விஜய் சேதுபதி பங்கு பெறும் டிவி நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து வெவ்வேறு டிவிக்களில் இடம் பெறுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்து நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் 'சர்வைவர்' நிகழ்ச்சி ஜீ தமிழ் டிவியில் செப்டம்பர் 12ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. அதன்பின் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.
இந்த மூன்று நிகழ்ச்சிகளுமே சர்வதேச அளவில் பல நாடுகளில் பல மொழிகளில் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வரும் ஒரு சர்வதேச கான்செப்ட். தமிழில் இப்படி மூன்று பிரபலமான நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து ஆரம்பமாக உள்ளது வியப்பான ஒன்றுதான்.
'மாஸ்டர் செப்' நிகழ்ச்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 'சர்வைவர்' நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 'பிக் பாஸ் சீசன் 5' இரவு 9.30 அல்லது 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று நிகழ்ச்சிகளுமே ரியாலிட்டி ஷோக்கள் என்பதாலும், வார இறுதி நாட்களில் மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே சமயத்தில் ஒளிபரப்பாகும் என்பதாலும் கடும் போட்டி இருக்கும்.
மூன்று பிரபல நடிகர்கள் இப்படி டிவி பக்கமும் வந்துவிட்டதால், ஏற்கெனவே ஓடிடி தளங்களால் தடுமாறி வரும் சினிமா, இந்த டிவி நிகழ்ச்சிகளாலும் வசூல் பாதிப்பை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.