நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் |
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய லாபம் படத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ளனர். படம் வருகிற 9ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் க்ளாரா என்ற இசை கலைஞராக நடித்திருக்கிறார். அவர் எர்க்ஹூ என்ற சீன இசை கருவியை பயன்படுத்துகிறவராக நடித்திருக்கிறார். படத்தில் இந்த கருவியை பயன்படுத்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனும், இசை அமைப்பாளர் இமானும் நிறைய ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து இமான் கூறியதாவது: லாபம் படத்தில் இயக்குனர் எஸ் பி ஜனநாதனுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதவை. சில படங்களுக்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமான பின், சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்தேன் அந்த தருணத்தில், என்னையும் ஒரு இசையமைப்பாளராக அங்கீகரித்து, என்னுடைய வீட்டிற்கு இயக்குனர் ஜனநாதன் வருகை தந்தார்.
அந்தத் தருணத்தில் அவர் 'இயற்கை' படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு பல்வேறு காரணங்களால் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும் என்னையும், என் திறமையையும் நம்பி வாய்ப்பளிப்பதற்காக வீடு தேடி வந்த முதல் இயக்குனர் ஜனநாதன்தான் .
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் 'லாபம்' படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்தில் 'சேருவோம் சேருவோம்..' எனத் தொடங்கும் ஒரு பாடல் உள்ளது. இந்த பாடலை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழப் பெண் பாடகி கிளியோபாட்ரா என்பவர் பாடியிருக்கிறார். அது ஒரு ராப் இசை பாடல். இந்தப் பாடலில் எர்க்ஹு என்றொரு இசைக்கருவியின் இசை இடம்பெற்றிருக்கும். இது சீன நாட்டை சேர்ந்தது. வயலின் இசைக்கருவி போன்றது.
இந்த இசைக்கருவியின் அமைப்பு எப்படி இருக்கும்? எத்தனை தந்திகள் அதில் இருக்கும்? அதனுடைய செயல்பாடு? பயன்பாடு? இது குறித்த விபரங்கள் விவரங்களையெல்லாம் கேட்டறிந்தார். ஏனெனில் இந்த படத்தில் நாயகி சுருதிஹாசன் கிளாரா என்ற இசைக் கலைஞராக நடித்திருக்கிறார்.
அவர் சம்பந்தப்பட்ட பாடல் என்பதால், ஒரு பாடலை தொடங்குவதற்கு முன் உள்ள சூழல் அதாவது எந்த சுருதியில் தொடங்கலாம்? எந்த ராகத்தில் அமையலாம்? எந்த மாதிரி டெம்போவில் அமைக்கலாம்? எந்த மாதிரியான இசைக்கருவிகளை பயன்படுத்தலாம்? குழு இசை எப்படி பயன்படுத்தலாம்? என்றொரு விவாதம் நடைபெறும். இதனை இயக்குனர் ஜனநாதன் திரையில் காட்சிப்படுத்த விரும்பினார்.
இந்தக் காட்சியைப் படமாக்கும் போது மிக நுட்பமாக எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்...? நான் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறேன். இது சரியா..? என விளக்கமாக கேட்டறிந்து கொண்டு படமாக்கினார். இந்த பாடல் காட்சியின் போது எர்க்ஹு என்ற இசைக்கருவியை அப்படியே பயன்படுத்தியிருந்தார்.
இந்த இசைக்கருவி எப்போது தோன்றியது? அந்த காலகட்டத்தில் அரசியல் மற்றும் சமூக சூழல்? இதனை யார் பயன்படுத்தினார்கள்? எதற்காக பயன்படுத்தினார்கள்? என்ற விவரங்களை எல்லாம், என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, அவர் இதனை ஆழ்ந்து கவனமுடன் கேட்டறிந்தார். ஒரு படைப்பை நூறு சதவீதம் நேர்த்தியாக திரையில் உருவாக்கிய படைப்பாளி ஜனநாதன் சார் என சொல்லலாம். என்றார்.