விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் ஏப்ரல் மாதக் கடைசியில் மூடப்பட்டன. அவற்றைத் திறக்க கடந்த வாரம்தான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும், தியேட்டர்களும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. திறந்த தியேட்டர்களுக்கும் 50 சதவீத இருக்கைகளுக்கும் மக்கள் வரவில்லை.
முன்னணி நடிகர்களின் புதிய படங்களுக்காகத் தியேட்டர்கள் காத்திருக்கின்றன. அந்த விதத்தில் முன்னணி நடிகரின் படமாக விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்' படம் அடுத்த வாரம் செப்டம்பர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள். நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு தியேட்டர்களில் 'லாபம்' படத்தின் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்த வாரத்தில் பெரும்பாலான தியேட்டர்கள் திறகப்பட்டுவிடும் எனத் தெரிகிறது. எனவே, சென்டிமென்ட்டாக 'லாபம்' என்ற பெயரிலேயே படம் அமைவது குறித்து தியேட்டர்காரர்களும் மகிழ்வுடன் இருக்கிறார்களாம்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் வர ஆரம்பித்துவிட்டால் மக்களும் வந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளார்கள். அடுத்த ஒரு வாரத்திற்குள் மேலும் சில பல புதிய படங்களின் வெளியீட்டு அறிவிப்புகள் வர உள்ளன.