அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
தற்போது ஒரே சமயத்தில் நான்கு பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது அந்த டிவி நிறுவனம். அதில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் மற்றும் மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் ஆகிய நான்கு படங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தை எட்டியுள்ளன.
அந்த வகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல விஜய்யின் பீஸ்ட் படமும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்பதும் கிட்டத்தட்ட ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்தநிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக டிசம்பர் 24ஆம் தேதி அன்றும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை காதலர் தின கொண்டாட்டமாக பிப்ரவரி 11ம் தேதியன்றும் வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த நான்கு படங்களுமே பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை குறிவைத்து ரிலீஸ் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.