இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் கவனிக்கத்தக்க நடிகராக அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அதன்பின் படங்கள் சரியாக அமையாத நிலையில் மீண்டும் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இடையில் மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்றவரை, சமீபத்தில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படத்தில் தான் பார்க்க முடிந்தது.
நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்திற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக நடித்திருந்தார் அஜ்மல். இந்தநிலையில் மீண்டும் நயன்தாராவுடன் இன்னொரு படத்திலும் இணைந்து நடிக்கிறார் அஜ்மல். மலையாளத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிக்க அல்போன்ஸ் புத்திரன் இயக்கம் படத்தில் அஜ்மலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தானே கூறியுள்ள அஜ்மல், இந்தப்படம் அல்போன்ஸ் புத்ரனின் நேரம் படம் பாணியில் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.