'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. டாட்டியா மாவட்டத்தின் ஓர்ச்சா, குவாலியர் கோட்டைகளில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இந்தோர் மாவட்டத்தின் ஹரிகேஷ்வரில் நடந்து வருகிறது. நர்மதா நதிக் கரையிலுள்ள ராணி அகில்யா பாய் கோட்டை, அரண்மனை மற்றும் சிவன் கோயில்களிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
கார்த்தி மற்றும் ரகுமானுடன் நடிகை த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. இந்த சிலைகளுக்கு நடுவில் த்ரிஷா காலில் செருப்பு அணிந்து நடித்துள்ளார்.
இது சிவலிங்கங்களையும், இந்துக்களையும் அவமானப்படுத்துதாகும் என்றும் அதனால் நடிகை த்ரிஷா மீதும், இயக்குனர் மணிரத்னம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து வித்யா மண்டல் அமைப்பின் தலைவர் தினேஷ் கட்டோர் ஹரிகேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.