படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லாபம்'. இப்படம் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு கடந்த வருடம் கொரோனா முதல் அலை ஊரடங்கு தளர்வின் போது கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற போது படப்பிடிப்பில் கட்டுப்பாடுகளை மீறி நிறைய பேர் கலந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி படப்பிடிப்பிலிருந்து இயக்குனரிடம் தெரிவிக்காமல் வெளியேறினார் ஸ்ருதிஹாசன். அதன்பின் அவர் சம்பந்தப்பட்ட ஓரிரு காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியிருந்ததால் அதை எப்படியோ சமாளித்தார்கள் என்று சொல்லப்பட்டது.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்த போது கூட அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தார் ஸ்ருதிஹாசன். ஆனாலும், சில மாதங்களுக்கு முன்பு 'லாபம்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'யாமிலி யாமிலியா' என்ற பாடலை வெளியிட்ட போது படக்குழுவினர் யாரும் சமூக வலைத்தளங்களில் ஸ்ருதிஹாசன் பெயரைக் குறிப்பிடவில்லை.
ஆனால், இரு தினங்களுக்கு முன்பு படத்தின் மூன்றாது சிங்கிள் பாடலான 'கிளாரா மை நேம் இஸ் கிளாரா' என்ற பாடலை வெளியிட்ட போது ஸ்ருதிஹாசன் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு வேளை அப்பாடலை ஸ்ருதிஹாசனே பாடியிருந்ததால் 'டேக்' செய்திருப்பார்கள். இருந்தாலும், அப்பாடலை தனது சமூக வலைத்தளங்கள் எதிலும் ஸ்ருதிஹாசன் ஷேர் செய்யவேயில்லை.
தனக்கு என்ன நஷ்டம் வந்தாலும், ஒட்டு மொத்தமாக 'லாபம் படத்தை புறக்கணிக்க ஸ்ருதிஹாசன் முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.