ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
''அரசியல் போறதுக்கு அறிவு வேண்டும்; சத்தியமாக எனக்கு அது கிடையாது,'' என நடிகர் விஜய்சேதுபதி கூறினார்.
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய லாபம் படம் செப்.9ல் தியேட்டரில் வெளியாகிறது. படம் உள்ளிட்ட விஷயம் குறித்து விஜய்சேதுபதி நேற்று அளித்த பேட்டி: 'லாபம்' படம் விவசாயத்திற்கு பின்னால் உள்ள பொருளாதார அரசியலை அவர் பாணியில் வெளிப்படுத்தியுள்ளார். விவசாயத்தை நாம் பார்க்காத புதிய கோணத்தில், ஜனநாதன் பார்த்த கோணத்தில் படத்தை பார்க்கலாம்.
'லாபம்' என்பது எப்படி பகல் கொள்ளையாக மாறுகிறது என்பதை பொருளாதார விஞ்ஞானிகள் கூறிய விளக்கத்துடன், தன் பாணியில் இயக்குனர் படமாக்கியுள்ளார். லாபத்தை பற்றிய பாடம், இப்படம். படத்தின் க்ளைமாக்ஸ் வரை அனைத்தையும் முடித்துக் கொடுத்து விட்டு தான் ஜனநாதன் மறைந்தார். உதவிக்கு ஆட்கள் இல்லாததால் தான், அவரை இழந்து விட்டோம்.
நான் நடித்த பல படங்கள் தயாராகி, நான்கு ஆண்டுகள் ஆகியும் சட்ட சிக்கலால் வெளிவராமல் இருந்தது. தற்போது அவை வெளியாவதால் அதிக படங்கள் வெளிவரும் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான படங்களை நான் தேர்வு செய்வதில்லை. கதையை சுவாரஸ்யமாக கூறவே விரும்புகிறேன். என்னால் முடிந்தது சம்பளத்தை விட்டுக் கொடுப்பதே.
ராமராஜன், ரஜினி, கவுண்டமணி, கனகா உள்ளிட்ட யார் இடத்தையும் நம்மால் நிரப்ப முடியாது. மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். அவர்கள் செய்ததில் கால் துாசி கூட என்னால் செய்ய முடியாது. இப்போது பாதி நேரத்தை டெக்னாலஜியே சாப்பிட்டு விடுகிறது. அரசியல் போறதுக்கு அறிவு வேண்டும். அந்த அறிவு சத்தியமாக எனக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.