''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கமலுக்கு மேக்கப் அலர்ஜி, லாக்டவுன் என சில காரணங்களால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்காமல் அதிக தாமதமாகி வந்தது. இப்படியான நிலையில் ஒரு வருட காலம் இந்தியன்-2 படப்பிடிப்பை லைகா நிறுவனம் கிடப்பில் போட்டிருந்தது. இதனால் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் படத்தை தொடங்கி விட்டார்.
ஷங்கர், ராம்சரண் நடிப்பில் தில்ராஜூ தயாரிப்பில் ஒரு படத்தை தொடங்கினார். இதையடுத்து இந்தியன்-2 படத்தை இயக்கி விட்டுதான் வேறு படத்தை இயக்க செல்ல வேண்டும் என்ற நீதிமன்றம் மூலமாக ஷங்கருக்கு தடை போட்டது லைகா நிறுவனம். ஆனால் விசாரணைக்குப் பிறகு ஷங்கருக்கு தடை கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் ராம்சரண் நடிக்கும் படவேலைகளை தொடங்கினார் ஷங்கர். இந்தநிலையில், நேற்று அந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டைரக்டர் ஷங்கரிடத்தில் இந்தியன்-2 படம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லி நான்கு வாரங்கள் கால அவகாசம் கேட்டார். இதனால் நீதிபதி வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.