குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் |
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை தற்போது கமலின் விக்ரம் படத்திலும் வில்லனாக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தைப் போலவே இந்த படத்திலும் வெயிட்டான வில்லனாக நடிக்கிறார் விஜயசேதுபதி.
இந்நிலையில், அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன், வெற்றிமாறன் என 11 இயக்குனர்கள் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத் தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இப்போது அப்படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தின் ஹிட் சென்டிமென்ட் காரணமாகவே இந்த முடிவினை லோகேஷ் கனகராஜ் எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.