'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா |
நடிகை ஸ்ரேயா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ரஜினியுடன் சிவாஜி, விஜய் உடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ என்ற ரஷ்ய டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கியுள்ளார். மியூசிக் ஸ்கூல் என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். ஒரு இசைப் படமாக உருவாகும் இந்தப் படத்தை பாப்பா ராவ் பையாலா இயக்குகிறார். ஷர்மன் ஜோஷி மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், பிரம்மானந்தம், வினய் வர்மா, கிரேசி கோஸ்வாமி, ஓசு பாருவா மற்றும் சுகாசினி முலாய் ஆகியோர் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 15ந் தேதி முதல் தொடங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.