அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் தீ இவன். இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
இந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா,உமா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள் .
ஒரு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த படம் கொரோனா காலம், மற்றும் கார்த்திக்கின் உடல்நல குறைவு, சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவைகளால் தடைபட்டிருந்தது. தற்போது திருப்பூர் பகுதிகளில் இதன் படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடந்து முடிந்திருக்கிறது.
"திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று படப்பிடிப்பை வேகமாக நடத்தினோம். தற்போது படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டது. அதற்கு பிந்தைய பணிகளை வேகமாக முடித்து விரைவில் திரைக்கு கொண்டுவருவோம்" என்கிறார் இயக்குனர் ஜெயமுருகன்.