அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் ஆரம்பத்தில் சூர்யா நடித்து, தயாரித்தார். பின்னர் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படத்தில் இருந்து விலக்கினார். அதன்பிறகு அருண் விஜய் நடிப்பில் படம் தயாரானது. கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அமைதிப்படை 2, கங்காரு, மிகமிக அவசரம், மாநாடு உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். “வணங்கான் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. பாலாவுடன் பணியாற்றியது எனது பாக்கியம். விலை மதிப்பற்ற அனுபவம். எனது இதயத்திற்கு நெருக்கமான படமாக வணங்கான் மாறி இருக்கிறது. ஒரு அசாதாரண வேலையை முடித்தது போன்று உணர்கிறேன்” என்று குறிபிட்டுள்ளார்.