'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் 'ஈரம்'. தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு அறிவழகன் - ஆதி கூட்டணி 'சப்தம்' என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை அறிவழகனே தயாரிக்கிறார்.
படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் படம் பற்றி இயக்குனர் அறிவழகன் கூறியதாவது : 'ஈரம்' படம் முழுக்க மழை மற்றும் தண்ணீர் சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. தண்ணீரின் வழியாக பேய் வரும். அதே போன்று 'சப்தம்' படத்தில் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சிகள் உருவாகியுள்ளன. முக்கியமாக, சப்தத்தை மையப்படுத்தி நிறைய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சவுண்ட் எபெக்ட்ஸ் மற்றும் விஷூவல் எபெக்ட்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்கியுள்ளோம். பின்னணி இசைக்காக தமன், ஹங்கேரி சென்றார்.
மும்பை, மூணாறு, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இடைவேளை மற்றும் கிளைமாக்சுக்காக 2 கோடி ரூபாய் செலவில், 120 வருட பழமையான கல்லூரி நூலகம் போன்ற பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இந்த படத்தில் ஆதி பேய் ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார். வழக்கமான பேய் படமாக இல்லாமல் ரசிகர்களுக்கு புதிய அனுவத்தை தரும் புதுமையான படமாக இருக்கும். என்றார்.