இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'பேராண்மை' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் சாய் தன்ஷிகா. அதன்பிறகு மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, கபாலி, விழித்திரு, காத்தாடி, இருட்டு உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக 'லாபம்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு ஓரிரு படத்தில் நடித்தார்.
தற்போது 3 வருட இடைவெளிக்கு பிறகு 'தி புரூப்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். தன்ஷிகா தவிர ரித்விகா, அசோக், ருத்வீர்வரதன், இந்திரஜா, மைம் கோபி, மாரிமுத்து, ராஜசிம்மன், அஷ்மிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராதிகா மாஸ்டர் இயக்கியுள்ளார். கோல்டன் ஸ்டூடியோஸ் 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாகிறது.