இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி |

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெற்றி மாறன் இயக்க இருந்த படம் 'வாடிவாசல்'. இதற்காக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து பூஜையும் தொடக்க விழாவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் நிஜமான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. சூர்யா ஜல்லிகட்டு காளை வளர்த்து அதனுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அதற்கு பிறகு படம் பற்றிய எந்த அப்டேட்டும் இல்லை. வெற்றி மாறனும், சூர்யாவும் வெவ்வேறு படங்களில் பிசியாகி விட்டனர். கங்குவா, புறநானூறு, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் குறித்த அறிவிப்புகளை சூர்யா வெளியிட்டார். ஆனால், 'வாடிவாசல்' குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. வெற்றி மாறன் 'விடுதலை' படத்தில் பிசியாகி விட்டார். இதனால் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாகவும், சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றி மாறனிடம் இதுகுறித்து ரசிகர்கள் கேட்டபோது “பணிகள் முடிந்துவிட்ட 'விடுதலை 2' படத்தின் ரிலீஸ் தேதியே எப்போது என்று எனக்குத் தெரியாது. இந்தப் படம் முடிந்த பின் 'வாடிவாசல்' பட வேலைகள் உள்ளன. அதன்பிறகு தான் வேறு என்ன படத்தை இயக்கப் போகிறேன் என்பது எனக்குத் தெரியும். அதனால் 'வட சென்னை 2' எப்போது என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்றார்.
இதன் மூலம் 'வாடிவாசல்' கைவிடப்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.