பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

ஓடிடி தளங்கள் கடந்த ஒரு வருட காலத்தில் விஸ்வரூபமெடுத்த பிறகு முன்னணி இயக்குனர்களின் பின்னால் தான் அந்த நிறுவனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. அவர்கள் இயக்கிய ஆந்தாலஜி படங்களை வெளியிட்டன, அவர்கள் இயக்கிய திரைப்படங்களுக்கு பெரிய விலை கொடுக்கவும் தயாராக இருக்கின்றன.
ஓடிடி தளங்கள் தங்களைப் போன்ற இயக்குனர்களை நம்பி இருக்கின்றன என்பதை உணர்ந்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் சிலர் ஒன்றிணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் மேனன், மிஷ்கின், சசி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோர் இணைந்து 'ரெயின் ஆன் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கப் போகிறார்களாம்.
அந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவைகளைத் தயாரிக்க உள்ளார்களாம். முதல் தயாரிப்பை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட இயக்குனர்களில் சிலர் ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருபவர்கள். சிலர் ஆரம்பித்து பெரும் நஷ்டம் அடைந்தவர்கள்.
வேறு எந்த திரையுலகிலும் இப்படி ஒரு முயற்சி நடந்ததில்லை. இந்த நிறுவனம் சிறப்பாக நடந்தால் அது மற்ற திரையுலகினருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.