அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த ஜுன் மாதம் வெளியான வெப் தொடர் 'த பேமிலி மேன் 2'. ராஜ், டிகே இயக்கிய இத்தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர். இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் பற்றி பல தவறான தகவல்கள் இத்தொடரில் இடம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக அரசு, சில அரசியல் கட்சிகள் இத்தொடருக்கு தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. ஆனால், எதிர்ப்புகளை மீறி தொடர் வெளியானது.
தற்போது ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இத்தொடர் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா, “மக்களுக்கென இருக்கும் சொந்த கருத்துக்களை நான் அனுமதிக்கிறேன். அந்தக் கருத்தில் அவர்கள் அப்படியே தொடரும் பட்சத்தில் மற்றவர்களின் சென்டிமென்ட்டை காயப்படுத்துவதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படி ஏதாவது ஒன்றை நான் வேண்டுமென்றே செய்வதாக அவர்கள் நினைக்கக் கூடாது என்பதற்காக எனது மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. அப்படி நடந்திருந்தால் மிகவும் வருந்துகிறேன்.
ஆனால், தொடர் ஒளிபரப்பானதும் பல சத்தங்கள் நின்றுவிட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை என்று சிலர் சொன்னதையும் பார்த்தேன். இன்னும் தங்களது கருத்தைத் தொடரும் மக்களுக்கு எனது மன்னிப்பு,” என்று கூறியுள்ளார்.
அதே சமயம், 'த பேமிலி மேன் 2' தற்போது தமிழ், தெலுங்கில் வெளியாகி உள்ளதாலும், தமிழில் அடுத்தடுத்து சமந்தா நடித்துள்ள படங்கள் வெளிவர உள்ளதாலும் அவர் இப்படி மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இந்த மன்னிப்பை சமந்தா இத்தொடர் வெளியான போதே கேட்டிருந்தால் அவர் மீதான மதிப்பு கூடியிருக்கும் என்றும் சிலர் கருதுகிறார்கள்.