'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நந்தினி. அந்த கதாபாத்திரம் மக்களின் மனதில் பதிந்து போகவே மைனா நந்தினியாகவே மாறிவிட்டார். தொடர்ந்து வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
மைனா நந்தினியும் அவரது கணவரும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மனைவிகளை கணவர்கள் சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்ற டாஸ்க் உள்ளது. இதில் கலந்து கொண்ட யோகேஷ் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார்.
யோகேஷ் தனது காதல் மனைவி நந்தினியின் முகத்தை நெஞ்சில் பச்சை குத்தி, அவரது மனைவிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்குமே சர்ப்ரைஸ் கொடுத்தார். இதை பார்க்கும் பலரும் இதுவல்லவோ ஜோடி என அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.