நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி |
சின்னத்திரை பிரபலங்களான மைனா நந்தினி மற்றும் யோகேஷ் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது இவர்களை ஒரு கும்பல் வழிமறித்து சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் நந்தினியின் கணவர் யோகேஷ் பைக்கில் சென்றவர்களை இடிக்க சென்றதாக அவர்கள் சண்டையிட்டனர். அவர்களை பேசி சமாதானப்படுத்திய யோகேஷ் காரை எடுக்க முயன்றபோது அந்த கும்பல் மைனா நந்தினி அருகே மிரட்டுவது போல் வந்து ஹாப்பி பர்த்டே என பூ கொடுத்து வாழ்த்துகின்றனர். உண்மையில் அந்த நபர்களை தனது மனைவியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிராங்க் செய்ய சொல்லி யோகேஷ் தான் ஏற்பாடு செய்துள்ளார். இதை வீடியோவாக தனது இண்ஸ்டாவில் வெளியிட்டுள்ள மைனா நந்தினி 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? எதிர்பாராத சர்ப்ரைஸ்' என பதிவிட்டுள்ளார்.