'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சின்னத்திரை நடிகைகள் லிஸ்ட்டில் டாப் இடத்தில் இருக்கிறார் ஆல்யா மானசா. சக நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவருக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து அண்மையில் பேட்டியளித்துள்ள ஆல்யா, 'அப்பா கேன்சர் நோயால் பாதிக்கபட்டிருந்தார். இதனால் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். காலையில் எழுந்து மேக்கப் போட்டு விட்டு ஆடிசனுக்கு செல்வேன். பலநேரம் அவர்களை என்னை அனுப்பிடுவார்கள். பொருளாதார நெருக்கடியினால் ஜிம் ட்ரெய்னராக வேலைபார்த்தேன். குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுத்தேன். பாடலில் பின்னணியில் குரல் கொடுப்பது போன்ற கிடைக்கும் வேலைகளை செய்தேன். இப்படி சினிமாவில் முயற்சித்துக் கொண்டிருக்கும் போது தான் சின்னத்திரை வாய்ப்பு வந்தது. அப்பாவை காப்பாற்ற சினிமா வாய்ப்பு தேடுவதை விட்டுவிட்டு சீரியல் வாய்ப்பை எடுத்துக் கொண்டேன். ஆனால் இப்போது அதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். காரணம் சினிமாவில் நடித்திருந்தால் தீபாவளி, பொங்கல் என தான் மக்கள் என்னை பார்த்திருப்பார்கள். இப்போது தினம் தினம் பார்க்கிறார்கள். எனக்கு அது சந்தோஷமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.