'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி சண்முகப்பிரியா தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு வருடத்திலேயே அரவிந்த் காலாமனார். இந்நிலையில், இவர்களது இரண்டாவது திருமணநாள் அண்மையில் வந்தது. அன்றைய தினத்தில் ஸ்ருதி தனது கணவர் புகைப்படத்தை அருகில் வைத்து கேக் வெட்டி கொண்டாடி 'உன்னை சந்திக்க காத்திருக்கிறேன்' என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதியின் இந்த நிலைமையை பார்க்கும் பலரும் ஒருபுறம் அவர் தைரியமாக இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டாலும் மறுபுறம் அவர் அரவிந்தை நினைத்து வருந்துவது குறித்து கவலைப்பட்டு வருகின்றனர். சிலர், ‛அரவிந்த் இறந்துவிட்டார். ப்ளீஸ் அதிலிருந்து வெளிய வந்து வேற லைப் அமைச்சிக்கோங்க' எனவும் அட்வைஸ் செய்து வருகின்றனர். கணவரை இழந்த ஸ்ருதி தற்போது வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நகர்வாக தற்போது லெட்சுமி சீரியலில் கம்பேக் கொடுத்துள்ளார். அதுபோலவே அவர் மீண்டும் மறுமணம் செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.