டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தயாரிப்பாளராக இருந்து இயக்குனர் ஆனவர் சி.வி.குமார். தற்போது அவர் தயாரித்து, இயக்கி வரும் படம் கொற்றவை. இதில் புதுமுகங்கள் ராஜேஷ் கனகசபை, சந்த்ரா, சுபிக்ஷா, அனுபமாக குமார், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார், பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி சி.வி.குமார் கூறியதாவது: டைட்டிலை பார்த்து விட்டு பலரும் இதனை பக்தி படம் என்று நினைக்கிறார்கள். இது பக்தி படம் அல்ல. தமிழர்களின் குல தெய்வ வழிபாடான கொற்றவையை சுற்றி நடக்கிற ஒரு புதையல் தேடும் கதை. ஹாலிவுட்டில் வெளிவந்த இண்டியானா ஜோன்ஸ். டிரஸ்சர் ஹண்டர் பாணியில் உருவாகும் படம்.
ஒரு புதையலை தேடி ஒரு குழுவினர் செல்கிறார்கள். அவர்களுக்கும், அந்த புதையலுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இந்த ஒன் லைனை வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க பொழுது போக்கு படமாக உருவாகிறது. படம் 3 பாகமாக வெளிவர இருக்கிறது. முதல் பாகம் வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு 3வது பாகத்தின் படப்பிடிப்புகள் நடக்கிறது. படத்தில் அதிகமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. இதற்கான பணிகள் தனியாக நடந்து வருகிறது. என்றார்.




