தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார். தனது திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்புகளில் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை அறிமுகப்படுத்திய இவர், மாயவன், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
தற்போது இவர் இயக்கி வரும் படமான கொற்றவை பிரமாண்ட பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாராகி வருகிறது. ஓம் பிலிம்சின் எஸ்.ஜே.குரு மற்றும் மயில் பிலிம்சின் டாக்டர் கே பிரபு தயாரிக்கும் இப்படம், இது வரை யாரும் முயற்சிக்காத உண்மை, புனைவு கதைக்களத்தில் உருவாகி வருகிறது. எழுத்தாளர் தமிழ்மகன் இந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.
![]() |