ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தென்னிந்தியத் திரையலகத்தில் தற்போதைய இளம் ரசிகர்களின் 'லவ்விங் கேர்ள்' ஆக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளைத் தொடர்ந்து தற்போது ஹிந்தி வரை சென்றுள்ளார். குறுகிய காலத்திலேயே தெலுங்கில் இளம் புயலைக் கிளப்பியவர். தற்போது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 2 கோடி பாலோயர்களுடன் தென்னிந்திய நடிகைகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்து, 1 கோடியே 93 லட்சம் பாலோயர்களுடன் காஜல் அகர்வால் 2ம் இடத்திலும், 1 கோடியே 80 லட்சம் பாலோயர்களுடன் சமந்தா 3ம் இடத்திலும், 1 கோடியே 73 லட்சம் பாலோயர்களுடன் ரகுல் ப்ரீத் சிங் 4ம் இடத்திலும், 1 கோடியே 72 லட்சம் பாலோயர்களுடன் ஸ்ருதிஹாசன் 5ம் இடத்திலும், 1 கோடியே 47 லட்சம் பாலோயர்களுடன் பூஜா ஹெக்டே 6ம் இடத்திலும், 1 கோடியே 40 லட்சம் பாலோயர்களுடன் தமன்னா 7ம் இடத்திலும் உள்ளனர்.
நடிகர்களைக் காட்டிலும் நடிகைகள் தான் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களை வைத்துள்ளார்கள். தென்னிந்திய நடிகர்களில் விஜய் தேவரகொன்டா, அல்லு அர்ஜுன் தலா 1 கோடியே 26 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளனர்.
தென்னிந்திய அளவில் நடிகை ராஷ்மிகா மந்தனாதான் முதன் முதலில் 2 கோடி பாலோயர்களைத் தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நடிகைகளில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 6 கோடியே 69 பாலேயார்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். 6 கோடியே 47 லட்சம் பாலோயர்களுடன் ஷ்ரத்தா கபூர் 2ம் இடத்திலும், பின்னணிப் பாடகி நேஹா கக்கர் 6 கோடியே 11 லட்சம் பாலோயர்களுடன் 3ம் இடத்திலும், தீபிகா படுகோனே 5 கோடியே 91 லட்சம் பாலோயர்களுடன் 4ம் இடத்திலும், ஆலியா பட் 5 கோடியே 46 லட்சம் பாலோயர்களுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.
பாலிவுட் நடிகர்களில் அக்ஷய் குமார் 5 கோடியே 33 லட்சம் பாலோயர்களுடன் முதலிடத்திலும், சல்மான் கான் 4 கோடியே 27 லட்சம் பாலோயர்களுடன் 2ம் இடத்திலும், ரன்வீர் சிங் 3 கோடியே 58 லட்சம் பாலோயர்களுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.