நடிகை மீனா கணவர் மறைவு : ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அஞ்சலி | 'வாரிசு' தயாரிப்பாளருக்குப் பிறந்த ஆண் வாரிசு | மோகன்லாலின் அலோன் படமும் ஓடிடி ரிலீஸ் தான் | நடிகர் பூ ராமு மறைவு ; மம்முட்டி நெகிழ்ச்சி பதிவு | சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிஜுமேனன் | ரேவதிக்கு விருது : கொண்டாடி மகிழ்ந்த தோழிகள் | பிரித்விராஜின் கடுவா தள்ளிப்போனதன் பின்னணி இதுதான் | பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் யஷ்? | சல்மான் கான், ஆமீர்கானுக்கு விருந்தளித்த ராம்சரண் | திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பம், பாலிவுட் சர்ச்சை |
1990 மற்றும் 2000-ன் முதல் பாதிவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். நடிப்பு, டான்ஸ் என ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒரு ரவுண்டு வந்தாலும் தமிழ் சினிமாவில் தான் அதிகப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
இன்றும் இளம் நடிகைகளுக்கு ரோல் மாடலாக விளங்கும் சிம்ரன், இன்றும் பலரது பேவரிட் நடிகையாக இருக்கிறார். இன்னும் தமிழ் சினிமாவில் சிம்ரனின் இடத்தை வேறு யாரும் பிடிக்கவில்லை.
விஜய் நடித்த யூத் படத்தில், 'ஆல்தோட்ட பூபதி' பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாடியிருப்பார் சிம்ரன். அந்தப் பாடலும், அதில் அவர்களின் நடனமும் இன்றும் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது சிம்ரன் இளம் தலைமுறையுடன் இணைந்து ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்குகளை குவித்து வருகிறது.