அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி |

விஜய் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் முடித்த பிறகு தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. பீஸ்ட் படத்தில் மூன்று வில்லன்கள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஒரு வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்து நடித்து வருகிறார். அதையடுத்து இயக்குனர் செல்வராகவன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது வில்லனாக டான்சிங் ரோஸ் நடிகர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சபீர் கலரக்கல். சபீர் இதற்கு முன்பு பேட்ட, டெடி, அடங்க மறு உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்காக சபீர் தனது உடலை வெறித்தனமாகக் குறைத்து அசல் பாக்சிங் வீரர் போல நடித்து அனைவரையும் அதிர வைத்தார். இப்படியாக மிரட்டல் வில்லன்கள் படத்தில் இணைந்துள்ளதால் பீஸ்ட் படத்திற்கு இமாலய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.




