மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நாற்பது வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சாரதா. மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்தவர் இவர் தான். ஊர்வசி என்கிற பட்டம் பெற்ற இவர் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதும் பெற்றவர். இந்தநிலையில் கடந்த இரு தினங்களாக இவர் இறந்துவிட்டதாக சோஷியல் மீடியாவில் திடீரென ஒரு வதந்தி பரவியது.
இதனை தொடர்ந்து பலரும் சாரதாவுக்கு போன் செய்து விசாரிக்க, ரொம்பவே சங்கடப்பட்டு போனார் சாரதா. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “நான் உயிருடன் நலமாக தான் இருக்கிறேன். எனக்கு எந்த நோய் நொடியும் இல்லை. அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம்.. ஒருத்தரை பற்றி வதந்தி பரப்ப வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்க கூடாது..” என பதிலடி கொடுத்துள்ளார் சாரதா.