என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

சமீபத்தில் நடிகை யாஷிகா கார் ஓட்டிவந்தபோது மகாபலிபுரம் அருகில் விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகா உள்ளிட்ட இரண்டு நண்பர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவரது உயிர்த்தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்த யாஷிகா தற்போது டிஸ்சார்ஜ் ஆகிவிட்டபோதும் தனது வீட்டிற்கு செல்லாமல் ஒரு நர்ஸின் வீட்டில் தங்கி உள்ளார்.
அதுகுறித்து யாஷிகா கூறுகையில், தனக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இப்போது வலி குறைந்துள்ளது. எனது வீட்டிற்கு சென்றால் எனது தோழி பவனியின் ஞாபகம் வரும். அதனால் தான் எனக்கு தெரிந்த நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.