சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

தமிழ் சினிமாவில் பழைய படங்களின் கதையை அப்படியே சுட்டு, இந்தக் காலத்திற்கேற்றபடி சில பல மானே, தேனே, பொன்மானே சேர்த்து புதுக் கதை போல பிரம்மாண்டமாகக் கொடுப்பவர் இயக்குனர் அட்லீ என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு.
மௌன ராகம் படத்தை ராஜா ராணி ஆகவும், சத்ரியன் படத்தை தெறி ஆகவும், அபூர்வ சகோதர்கள் படத்தை மெர்சல் ஆகவும், சில பல தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் படங்களை எடுத்து பிகில் ஆகவும் கொடுத்தார் என்பதை இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அட்லீ, பாலிவுட் வரை சென்றுவிட்டார். ஷாரூக்கான் நாயகனாக நடிக்க அவர் இயக்க உள்ள ஹிந்திப் படத்தின் அறிவிப்பு வரும் 15ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பட அறிவிப்புக்காக தனியாக ஒரு டீசரை ரெடி செய்து வருகிறார் என்கிறார்கள்.
அதே சமயம் இப்படத்தின் கதை, 2006ல் விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்து, உதயன் என்ற இயக்குனர் இயக்கிய பேரரசு படத்தின் கதை என்றும் அரசல், புரசலாகப் பரவியுள்ளது. தனது அப்பாவைக் கொன்றவர்களைப் பழி வாங்க ஒரு விஜயகாந்த் துடிக்கிறார். அந்த விஜயகாந்த் கொலை செய்யத் துடிப்பவர்களை, போலீஸ் அதிகாரியான மற்றொரு விஜயகாந்த் காப்பாற்றத் துடிக்கிறார். இதுதான் பேரரசு படத்தின் கதைச்சுருக்கம்.
மெர்சல் கதையும் ஏறக்குறைய இப்படித்தானே இருக்கும். நிறைய பழைய தமிழ்ப் படங்களைப் பாருங்கள் இளம் இயக்குனர்களே, அதிலிருந்தே உங்களுக்கு பல இன்ஸ்பிரேஷன்கள் கிடைக்கும். கவனிக்க, இன்ஸ்பிரேஷன் என்றே சொல்கிறோம். காப்பி என்று சொல்லவில்லை.