சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் படம் “ஆனந்தம் விளையாடும் வீடு”. குடும்பங்களை மையமாக வைத்து, அழகான கதையினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நந்தா பெரியசாமி. நாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். இவர்களுடன் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, ஜோ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, சுஜாதா, பிரியங்கா என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் சிக்கலான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்து படத்தின் டிரைலர், இசை, வெளியீடு குறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாக உள்ளது. இப்படத்தை ஶ்ரீ வாரி பிலிம் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார்.