சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
ஆல்பம் இசை கலைஞராக இருந்து திரைப்பட இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர் ஹிப் ஆப் தமிழா ஆதி. அவர் தற்போது இயக்கி , நடித்து வரும் படம் சிவகுமாரின் சபதம். இதில் மாதுரி அவரது ஜோடியாக நடிக்கிறார். படத்தின் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில் ஒவ்வொரு பாடலாக வெளியிட்டு வருகிறார் ஆதி.
முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். நாயகி (மாதுரி ) நாயகனை (ஆதி) காதலித்து, அவரது அழகை மற்றும் போற்றத்தக்க பண்பை, நினைந்துருகி பாடுவதாக வரும் பாடல் இது.
படத்திற்கு அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் வெளிவர இருக்கிறது.