இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! |

50வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தாய்மண்ணே வணக்கம், என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது. இதேபோன்று வரும் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படி உருவாகும் இசை ஆல்பம் பெருங்காற்றே.
இந்த ஆல்பத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதனை சத்யம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.ராஜசேகர் இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சக்ரா அறக்கட்டளை சார்பில் சக்ரா ராஜசேகர் தயாரிக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த பாடல் தமிழில் தொடங்கி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் தனித்தனியாக உருவாகிறது.
ஒவ்வொரு மொழி பாடலிலும் அந்த மொழியில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை இடம் பெறும். தமிழில் வ.உ.சிதரம்பரனாரின் வாழ்க்கை இடம்பெறுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதுகிறார்கள். தமிழில் அருண்ராஜா காமராஜ் எழுதுகிறார்.
இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது. என்றார்கள்.