லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஒருவர் மட்டுமே நடிக்கும் படங்கள் அவ்வப்போது பரிசோதனை முயற்சியாக வெளிவரும். கடைசியாக பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படம் இந்த வகையை சேர்ந்தது. அதேபோன்ற ஒரு படத்தில் தற்போது வெயில் பிரியங்கா நடித்து வருகிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தை அபிலாஷ் புருஷோத்தமன் தயாரித்து, இயக்குகிறார். பிரதாப் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார், தீபன்குரன் கைதப்ரம் இசை அமைக்கிறார்.
பிரியங்கா கூறியிருப்பதாவது: ஒற்றை கதாபாத்திரத் திரைப்படங்கள் சினிமாவில் மிகவும் அரிதானவை. சவாலானது என்றாலும் அதை செய்வது ஒரு கலைஞருக்கு மன திருப்பி அளிப்பதாகும். மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிராணா என்ற படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த படம் இந்தியாவில் 6 வது படமாகும். ஒரு இக்கட்டான சூழ்நிலை ஒன்றை ஒரு பெண் சந்திக்கும்போது அவள் தன்னை காப்பாற்றிக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறாள் என்பதுதான் படத்தின் கண்டன்ட். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது, என்றார்.