சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் காதல் பின்னணியில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார்..
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆனாலும் இந்தப்படத்தின் அப்டேட் குறித்து சமீபகாலமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தநிலையில் படத்தின் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார், தனது டுவிட்டர் பக்கத்தில் “இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.. மூன்றே நாட்கள் பொறுத்திருங்கள் அன்பான டார்லிங் (பிரபாஸ்) ரசிகர்களே. அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாக போகிறது” என வேண்டுகோள் வைத்து பிரபாஸ் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளார்.




