நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

நடன இயக்குனர், நடிகை மற்றும் அரசியல்வாதி என பயணிக்கும் காயத்ரி ரகுராம், நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் சினிமாவில் நடன இயக்குனராக களமிறங்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ரீமேக் படத்தை கண்ணன் இயக்குகிறார். இதில் நடன இயக்குனராக காயத்ரி ரகுராம் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், காயத்ரி அரசியலை விட்டு விலகுவாக தகவல் வெளியானது.
இதுகுறித்து காயத்ரி ரகுராம் பேட்டி: கடந்த நான்காண்டுகளாக இந்த வதந்தி அவ்வப்போது வந்து வந்து போகிறது. நான்காண்டுகளுக்கு முன் வெளியான மீம்ஸை போரடித்தால் திடீரென பயன்படுத்துகின்றனர் வேலையற்றவர்கள். நான் எப்போதும் போல அரசியல் மற்றும் சினிமாத் துறையில் பயணித்து கொண்டிருக்கின்றனர். மீண்டும் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்ற களமிறங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. கடைசியாக தலைவி படத்திற்கு பணியாற்றினேன். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.