காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கேரளாவில் கடந்த ஜூலை-17 முதல் சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனாலும் சில பெரிய படங்கள் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு கிளம்பிச் சென்றுவிட்டன. அதேசமயம் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் டொவினோ தாமஸ் தற்போது சூப்பர் ஹீரோ கதையாக உருவாகி வரும் மின்னல் முரளி என்கிற படத்தில் நடித்து வருகிறார்..
இந்தநிலையில் தற்போது கேரளாவின் தொடுபுழா அருகில் உள்ள குமாரமங்கலம் பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்கி நடத்த ஆரம்பித்தனர். ஆனால் கொரோனா தாக்கம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பகுதி என்பதால், அந்தப்பகுதி மக்கள் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முதலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்த போலீஸார் பின்னர் அதை திரும்ப பெற்றனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் கொரோனா முதல் அலை துவங்கியபோதே பாதியில் நின்றது. அந்த சமயத்தில் தான் இந்தப்படத்திற்காக போடப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள சர்ச் செட்டை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




