Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ்ராஜை துரத்தும் உதவி இயக்குனர்கள்!

08 டிச, 2012 - 12:20 IST
எழுத்தின் அளவு:

தனது டூயட் மூவிசில் பணியாற்றும் அனைத்து டெக்னீசியன்களுக்கும் நல்ல சம்பளம் கொடுக்கக்கூடியவர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக உதவி இயக்குனர்களின் திறமையை மதிக்கக்கூடியவர். அவர்கள் யாரிடம் என்ன திறமை இருக்கிறதோ அதை அறிந்து தனது கம்பெனி படங்களில் வாய்ப்பு கொடுப்பார். நண்பர்கள் படம் தயாரித்தால் தனது உதவியாளர்களுக்கு சிபாரிசு செய்து அவர்களை இயக்குனராக்குவார். ஆனால் சமீபகாலமாக அவர் படம் தயாரிப்பது குறைந்து விட்டது. அவ்வப்போது ஒரு படம் தயாரிப்பவர் அந்த படத்தை தானே இயக்கி விடுகிறார். இதனால் அவரிடத்தில் இருக்கும் உதவி இயக்குனர்களுக்கு இயக்குனர் ப்ரமோஷன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

அதனால், பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் படங்களில் பணியாற்றிய சுமார் 60 உதவி இயக்குனர்கள் இப்போது இயக்குனராவதற்காக கம்பெனி கம்பெனியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதில் பலர் தங்களுக்கு டூயட் மூவீசிலேயே படம் இயக்கும் வாய்ப்புத்தருமாறும் பிரகாஷ்ராஜை துரத்தி வருகிறார்கள். ஆனால் இப்போது அதற்கான சூழல் இல்லை என்பதால், அலுவலகத்துக்கு சென்றால் அவர்கள் தன்னை மொய்த்துக்கொள்வார்கள் என்பதால், சென்னை வரும்போது ஹோட்டல்களில் தங்கிவிட்டு மும்பைக்கு எஸ்கேப் ஆகி விடுகிறார் வில்லன் பிரகாஷ்ராஜ்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
09 டிச, 2012 - 06:43 Report Abuse
ram chellam pathu paisa tharathu.jaguratha!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in