''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கேரளாவில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது. இது குறித்து நடிகை சுவாசிகா நேர்காணல் ஒன்றில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: திருமண வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்கும் பெண்கள் சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயம், குடும்ப சூழ்நிலை போன்ற பல காரணங்களால் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளனர். நான் திருமணம் செய்து கொள்ளும்போது பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை தீர்க்க முடிந்தவரை முயற்சி செய்வேன். நிலைமை கைமீறி போனால் விவாகரத்து பற்றி யோசிப்பேன்.
இரண்டு பேர் மகிழ்ச்சியோடு வாழத்தான் திருமணம் செய்து கொள்கின்றனர். தாங்கமுடியாத பிரச்சினைகள் வரும்போது விவாகரத்து செய்து கொள்வது சிறந்த வழியாகும். தற்கொலை செய்து கொள்வது கொடுமையானது.
விவாகரத்தும், திருமணம்போன்று புனிதமானதுதான். அது ஒரு புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. பெண்கள் மோசமான வாழ்க்கைக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரச்சினைகள் வரும்போது சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுவாசிகா தமிழில் கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காலி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.