7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படம் துக்ளக் தர்பார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன், பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர்  பிரசாத் தீனதயாளன் இயக்கி உள்ளார்.
இந்த படம் தியேட்டரில்தான் வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். ஆனால் அதன்பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது படம் நேரடியாக டிவியில் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதி தற்போது சமையல் நிகழ்ச்சி நடத்தி வரும் சேனலில் படம் ஒளிபரப்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்திரையில் வெளியான பிறகு ஓடிடி தளத்தில் வெளிவரும் என்று தெரிகிறது.
சமுத்திரகனி நடித்த ஏலே, வெள்ளையானை, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி, ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ள உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்கள்தான் தொலைக்காட்சியில் வெளியானது. முதன் முதலாக ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் தொலைக்காட்சியில் வெளியாவது தியேட்டர் அதிபர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று தெரிகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும்.
இதேபோன்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள பூமிகா டிவியில் ஒளிபரப்பாகிறது. இது ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படமாகும். இதில் அவர் பூமா தேவியாக நடித்திருக்கிறார். படத்தை அறிமுக இயக்குனர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கி உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.