கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

'ராஜா ராணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தொடர்ந்து 3 வெற்றிப் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார். அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஹிந்தி படத்தை இயக்க உள்ளார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.