அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார்.
குழந்தை பெற்ற பிறகும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் முன்பை போலவே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகிறார். குழந்தை பிறந்த பின்னர் எமி ஜாக்சன் தனது பழைய புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார். குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே மீண்டும் பழைய உடலமைப்புக்கு திரும்பினார். அதைக் காட்டும் வகையில் சமீபத்தில் படுகவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளார்.