ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி, விஜய் உடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ என்ற ரஷ்ய டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஸ்ரேயா சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், சில குறும்பான வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். இன்ஸ்டாவில் ஸ்ரேயாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரேயா சமீபத்தில் 16 வயதில் முதன் முறையாக புடவை கட்டிய போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது.