சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
சமீப காலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் காதல் கதைகள் தனிப் பெரும் இடத்தை பிடித்து வருவது போல் அதில் நடிக்கும் நாயகன், நாயகியும் அவர்களுக்கு இடையே நடக்கும் ரொமான்ஸும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் புதிய ஜோடியுடன் சுவாரசியமான காதல் கதையோடு விஜய் டிவியில் ஒரு புதிய தொடர் வெளிவந்துள்ளது.
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில், எஸ்.குமரன் இயக்கும் புதிய மெகா தொடர் "தமிழும் சரஸ்வதியும்". நாயகன், நாயகி இருவருக்குமே படிப்பில் பிரச்னை. தான் சரியாக படிக்காததால் தன் மனைவியாவது நன்றாக படித்திருக்க வேண்டும் என நினைக்கிறார் நாயகன். ஆனால், படிப்பில் திணறும் நாயகிக்கும் நாயகனுக்கும் எப்படி காதல் உருவ போகிறது என்பது தான் கதையின் மையக்கரு.
சரவணன் - மீனாட்சி தொடங்கி ஆதி - பார்வதி வரை இன்றைய தலைமுறையினர் தொலைக்காட்சி தொடர்களில் வரும் காதல் ஜோடிகளை கொண்டாடி பிரபலமாக்கி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே தொலைக்காட்சி தொகுப்பாளர்களாகவும், சின்னத்திரை நட்சத்திரங்களாகவும் புகழ் பெற்ற தீபக் - நக்ஷத்திரா ஜோடி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீபக் தினகரனை ஏற்கனவே தென்றல் தொடரின் மூலம் காதல் நாயகனாக இயக்கிருந்தார் எஸ்.குமரன். இவர்களது கூட்டணியில் மீண்டும் ஓர் காதல் கதை என்பதும் நேயர்கள் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது.
"தமிழும் சரஸ்வதியும்" தொடர் ஜுலை 12 ஆம் தேதி முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.