பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நான்கு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் முடிவுற்றது.
இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி. இந்த மருத்துவ பரிசோதனைகளை முடித்து கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வதார் ரஜினி. இந்நிலையில் தற்போது 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது.
இந்த படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பெலிசியா டவர்சில் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி கலந்துக்கொண்டு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்போடு ரஜினி தொடர்பாக மொத்த காட்சிகளும் முடிக்கப்பட்டுவிடும்.
இதையடுத்து கோல்கட்டா செல்லும் படக்குழு அங்கு சில காட்சிகளையும், தொடர்ந்து லக்னோவில் சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதேநேரம் இந்த இரண்டு நாள் படப்பிடிப்புக்கு பிறகு வரும் 25ம் தேதி முதல் டப்பிங் பணிகளில் ரஜினி கவனம் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாவது உறுதியாகி உள்ளது.