175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
கமல் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் விக்ரம்.. இன்னும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை என்றாலும், இந்தப்பட அறிவிப்பின்போதே டீசருடன் தான் டைட்டிலை அறிவித்தனர். அந்த டீசரை படமாக்கியவர் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். லோகேஷ் கனகராஜுடன் ஏற்கனவே கைதி, மாஸ்டர் படங்களில் அடுத்தடுத்து பணிபுரிந்தவர். விக்ரம் படத்திலும் அவர் தான் பணிபுரிவதாக இருந்தது.. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால், தற்போதைய சூழலில் சத்யன் சூரியன் வேறு படத்திற்கு தனது தேதிகளை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து விக்ரம் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். தேசிய விருது பெற்ற மலையாள ஜல்லிக்கட்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த இவர், விஜய்யின் சர்கார் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.