தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன், பல தடைகளை தாண்டி தனது வாழ்க்கையில் முன்னேறியுள்ளார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் 'டாக்டர்'. திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் 'டாக்டர்' படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. இதையடுத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள 'அயலான்' படத்தையும் முடித்துள்ளார்.
தற்போது 'டான்' படத்தில் பிசியாக நடித்து வந்தார். இதில் அவருக்கு கல்லூரி மாணவர் தோற்றம். கொரோனா ஊடரங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் கிங்ஸ்லீ மூவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. டான் படம் கல்லூரி கதைக்களத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருவதால் அதற்காக சிவகார்த்திகேயன் வெகுவாக உடல் எடையைக் குறைத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அதை தெரிந்து கொள்ளலாம். சிவகார்த்திகேயனின் மெலிந்த தோற்றம் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.